Kolli Malai
தெய்வீகக் கொல்லிமலை
பல்லாயிரகணக்கான மிக சக்திவாய்ந்த பிரசித்தி பெற்ற மிக அறிய மூலிகைகளை தன்னகத்ததே கொண்டது, கொல்லிமலை . வரலாற்று சிறப்பு மிக்க கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த பூமி, கொல்லிமலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பாடல் பெற்ற ஸ்தலமாக மிக பழமையான அரப்பளீஸ்வரர் சிவாலயத்தை தன்னகத்ததே கொண்டது, கொல்லிமலை. மிக சக்திவாய்ந்த வன தேவதை கொல்லிப்பாவை எனும் காளி தேவியின் தெய்வீக அருளாட்சிக்குட்பட்டது கொல்லிமலை.
தென் இந்தியாவிலேயே மிக மிக உயரமான நீர்வீழ்ச்சியாக “ஆகாய கங்கை” எனும் அழகிய ஆர்பரிக்கும் தெய்வீக மூலிகை அருவியை தன்னகத்ததே கொண்டது, கொல்லிமலை. கனவு பூமியாக, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக தினம்தோறும் தன்னிடத்தில் வரும் ஆயிரம் ஆயிரம் மக்களை ஆனந்தத்தில் குளிர்விக்கும் மலையாக திகழ்வது கொல்லிமலை. எங்கும் பசும் போர்வை போர்த்தி விண்ணை முட்டும் உயரம் கொண்ட பல லட்சக்கணக்கான மரங்களால் பறந்து விரிந்த பரப்பளவைக் கொண்டு மலைகளின் அரசியாய் அதிசயமாய் திகழ்வது, கொல்லிமலை.
- மகான் அகத்திய முனிவர்
கொல்லிமலை

