TEMPLE CONSTRUCTION
திருக்கோவில் வடிவமைப்பு
வரலாற்று சிறப்புமிக்க கொல்லிமலைச்சாரலில் சித்தர்களின் தெய்வீக பூமியான ஓம் குருவனத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சம் பசுஞ் சோலையில் ஆயிரக்கணக்கான மரங்களுக்கு நடுவே 72000 கோடி ரிஷிகளை உணர்த்தும் வகையில் மனித உடலின் 72000 நாடிகளை அடிப்படையாகக் கொண்டு 72000 சதுர அடி பரப்பளவிலும் ஒரு ஆரோக்கிய மனிதனின் ஒரு நாளைய சுவாசத்தின் எண்ணிக்கைக் குறிக்கும் வகையில் 21600 சதுர அடியில் சுற்றம்பலம் அமைத்து, மனித உடலின் 7200 சூக்ஷும மையங்களை குறிக்கும் வகையில் 7200 சதுர அடியின் நடுவே, ஈரேழு (14) பிறவி சுழற்சிகளை கடந்து செல்வதை தெரிவிக்கும் வகையில் 14 அடி உயரத்தில் ஞானபீடம் அமைத்து அதில் மூன்றாம் கண் எனும் புருவ மத்தியமான ஞானவாசல் வழியே சென்று 6 ஆதாரங்களிலும் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாஹதம், விசுக்தி, ஆக்ஞை) ஒவ்வொரு ஆதாரமும் மூன்று நிலைகளை (ஜாக்ரத், ஸ்வப்பனம், சுழுத்தி) கடந்து செல்லும் 18 படிநிலைகளை குறிக்கும் வகையில் 118 சக்தி பீடங்கள் ஒரே கல்லால் (கற்றாலி) 18 படிகளாக அமைக்கபடுகிறது.
மனித சரீரத்தில் ஐம்புலன்களாக அறியப்படும் 9 துவாரங்களை (கண்கள், காதுகள், மூக்கு துவாரங்கள், வாய் மற்றும் உள் நாக்கிற்கு மேலே இரண்டு துவாரங்கள்), குறிக்கும் வகையில் 9 வாயில்களால் திருக்கோவிலானது அமையப்பெறுகிறது.
மனித உடல் அணுக்களின் முழுமைக்கும் புதுப்பிப்பதற்கான ஒரு சுழற்சிக்கான கால அளவை குறிக்கும் ஒரு மண்டல காலமான 48 நாட்களை உணர்த்தும் வகையில் கருங்கல்லால் ஆன (கற்றாளி) 48 தூண்கள் திருக்கோவிலில் அமையப்பெறுகிறது.
மனிதரில் உடல், மனம், உயிரின் வினைப் பதிவுகளை மாற்றுவதற்கான மற்றும் ஒரு முழு பரிமான மாற்றத்திற்கான 108 நாட்களை ( 2 1/4. மண்டலம் ) குறிக்கும் வகையில் சக்தி வாய்ந்த அஷ்ட திக்கு சிவலிங்கங்கள் 18 சித்தர்கள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள். சப்த ரிஷிகள் ஆகிய 108 ஞானபீடங்கள் திருக்கோவில் சுற்றுப்பிரகாரத்தில் ஸ்தாபிக்கபடுகின்றன
14 அடி உயரத்தில் மகான் அகத்திய மாமுனி மற்றும் பகவான் பரசுராமர் ஆகியோர்களது திருவுருவச்சிலையும் தெய்வீக திவ்யப் 18 ஆம் படி இருபுறங்களிலும் காவல் தெய்வங்களான கருப்பசாமி மற்றும் கடுத்தசாமி ஆகியோர்களுக்கு துணை கோவில்கள் மற்றும் 14 அடி ஞானபீடத்தின் உயரத்தை பயன்படுத்தி 2500 சதுர அடியில் திவ்ய நாம சரணாலயம் அமைய பெற்று கல்இசெங்கல்இ சுண்ணாம்புஇகடுக்காய்இஎலுமிச்சை சாறு போன்ற இயற்கை பொருட்களே முடிந்தவரை பயன் படுத்தப்பட்டு உலோக உருபுகள் மற்றும் உரைப்பூச்சிக்கு ஐம்பொன் மற்றும் செம்பு பயன்படுத்தப்படுகிறது. தரை தள வராண்டாவில் 7200 சதுர அடி சுற்றியும் சுவாமி ஐயன் ஐயப்பனின் திவ்ய வாழ்வும் வாக்கும் சித்தரிக்கும் வகையில் இயற்கை நிறமிகளின் கலை படைப்புகள் பயன்படுத்தப்படுகிறது
தரை தள மண்டபமான திவ்ய நாம சரணாலயத்தில் நாம ஜெப அமர்வுகளுக்கு ஏற்றவாறு தெய்வீக மேற்கூரை மற்றும் குவிமாட அதிர்வலைகளை பிரதிபலிக்கும் வகையில் சிறப்புவாய்ந்த கூரைகள்(னழஅந) அமைக்கப்படுகிறது
